பாதி

*************************************

நேற்று
இரண்டு கனவு கண்டேன்,
ஒரு கனவு,
உன்னை காதலிப்பது போல...

அப்போ
இன்னொரு கனவு...?
என்றாள்
என் தோழி ஆர்வமாக..

ஹி... ஹி...
இன்னொரு கனவும்,
உன்னை
காதலிப்பது போல்தான்...

மொக்கைகள்
என்பவை,
அறுப்பதல்ல...
அறுக்கப்படுவது.

ஆனால்,
காதல் என்பது
நேசிப்பது மட்டுமல்ல,
நேசிக்கப்படுவதும் தான்...

எனவே,
என்னோட பாதி மனசு
உன் பக்கம் வந்துருச்சி..
என்றேன்.

அப்போ,
மீதி மனசு...?
என்றாள்,
சந்தேகமாக..

அதுவும்
உன் பக்கம் வந்துருச்சி..

"டேய் ‌..
உன்னை.....
பொய் கோபமாய்
பொய்யாய்
என்னை அடிக்க வந்தாள்.

திடீரென,
சிரிப்பை நிறுத்தி விட்டு
கவலையானாள்.

"இரண்டு பேர்
சம்மதிச்சாதான்
நம்ம கல்யாணம் நடக்கும்...",
என்றாள்..

"யாரு இரண்டு பேர்...?"

"ஒருத்தர், எங்க அம்மா..."

"இன்னொருத்தர்....?".

திடீரென சிரித்தாள்,
"ஹி... ஹி...
இன்னொருத்தரும்
எங்க அம்மாதான்..."

ங்கொய்யால...

.

✍️கவிதைக்காரன்

(எத்தனை நாள்தான்,
எல்லோருக்கும்
புரியுற(!) மாதிரி,
சீரியஸாவே எழுதுறது...?)

எழுதியவர் : கவிதைக்காரன் (18-Oct-21, 10:32 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : paathi
பார்வை : 24

மேலே