அன்பை கட்டினால் வம்பு பணத்தை காட்டினால் தெம்பு

அன்பு என்பது காமத்தை கடந்தது எப்போதோ ஒரு காலத்தில் நடந்தது
ஆசை மோகத்தின் பிள்ளை இதன் ஆர்ப்பாட்டத்திற்கு இல்லை எல்லை
இன்பம் ஆசை போடும் ஓசை, 24 மணி நேரமும் மனம் போடும் அசை
ஈரம் என்பதோ மழையால் நிகழ்வது; கண் ஓரங்களில் காய்வது ஈரமா?
உண்மை என்பது என்ன? எப்போதும் அறியாமல் புரியாமல் நாம் எண்ண
ஊக்குவிப்பு எதற்கு ஏதேனும் ஒன்றை செய்யாமல் செய்து பின் முழிக்க
எதற்கு இந்த வீண் கற்பனை?அப்போதுதான் என் எண்ணங்கள் விற்பனை
ஏன் ஏன் ஏன், இதை நாம் கேட்பது ஏன்? கேட்காமல் மௌனித்துபது ஏன்?
ஐம்புலன்கள் நம்மை அடக்குகையில், எதை நாம் எப்படி அடக்குவது ?
ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு இன்னொருவன், படியுங்கள் திருத்தி
ஓராயிரமாயிரம் எண்ணங்கள் ஓர்நாளில் எவ்வளவு கோடி வாழ்நாளில்?
ஒளவை ஒன்று மட்டும் தான் ஒளக்கு, ஜவ்வு மிட்டாய்தானே ஜவ்வுக்கு
அஃக்கம் பக்கத்தினருக்கு காட்டத்தானே பணமும் மிடுக்கும் செருக்கும்!

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (18-Oct-21, 3:46 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 70

மேலே