அத்திப் பிஞ்சு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மூலக்கி ராணியறும் மூவிரத் தந்திருஞ்
சாலக் கடுப்புந் தரிக்குமோ - மாலரவத்
துத்திப் படவல்குற் றோகாய் துவர்ப்பையுறும்
அத்திச் சிறுபிஞ்ச ருந்து

- பதார்த்த குண சிந்தாமணி

மூலவாயு, கிராணி, இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு இவை விலகுமென்பர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Oct-21, 8:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே