அப்பழுக்கற்ற அரசியல் தலைவர் அமரர் திரு, கக்கன்

அப்பழுக்கற்ற அரசியல் தலைவர் அமரர். திரு, கக்கன்!

(வாக்களராகிய நம் கடமை!-வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள்!)

பெருந்தலைவர் காமராஜர் நம் தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்ற போது தனது அமைச்சரவையில் ஏழு பேரை மட்டுமே சேர்த்துக் கொண்டார். அவர்களில் ஒருவர் அமரர் திரு.கக்கன் அவர்கள்.

அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த துறைகள். --
காவல்துறை,
பொதுப்பணித் துறை,
விவசாயத் துறை,
சிறுபாசனத் துறை,
கால்நடைப் பராமரிப்புத் துறை,
உள்துறை,

சிறைத்துறை,
நிதித் துறை,
கல்வித் துறை,
தொழிலாளர் நலத் துறை,
மற்றும்
மதுவிலக்குத் துறை.


"ஒரு அமைச்சருக்கு இத்தனை துறைகளா?" என்று உங்களுக்குக் கண்ணைக் கட்டுகிறது இல்லையா
அது தான் அன்றைய உண்மை நிலை!
மூத்த அரசு அதிகாரிகள் பலரும் இதைப் பற்றிக் கூறிச் சற்றுக் குறைப் பட்டுக் கொண்ட போது காமராஜர் என்ன சொன்னார் தெரியுமா?

"ஒரு அமைச்சருக்கு எத்தனை துறைகளின் பொறுப்பு ஒதுக்கப் பட்டாலும் அதனால் என்னாங்கரேன்?
அதிகாரிகள் தானேப்பா துறை வேலைகளைச் செய்யறாங்க? அமைச்சர் மேற்பார்வையும் கண்காணிப்பும்
பண்ணரவருதானே? அதுக்கும் மேலெ, கக்கன் மாதிரி ஒரு திறமசாலி முதலமைச்சராவே வரலாம்! தெரியுமா?
அவரே எல்லாத் துறைகளையும் வச்சுக்கலாம்கரேன்!"

இது, காமராஜரின் சிக்கன நடவடிக்கையைக் காட்டுகிறது, ஆனால் அதைவிட,
அவர், திரு. கக்கன் மீது வைத்திருந்த அளப்பரிய நம்பிக்கையைத்தான் தெளிவாகக் காட்டுகிறது.

இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர் கக்கன்.

பத்து வருடங்கள் அமைச்சராக இருந்த அவர், எப்போது வெளியூர் சென்று தங்கினாலும், தன் துணிகளைத் தானே துவைத்துக் கொள்வார், வேலையாளை எதிர்பார்க்க மாட்டார். ஒரு முறை அவர் திருச்சி மாவட்டத்தில் பல
நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு இரவு ரயிலில் சென்னைக்குத் திரும்பிச் செல்ல வேண்டுடி இருந்தது. நிகழ்ச்சிகளை முடித்து விட்டுத் திருச்சி ரயில் சந்திப்பிற்கு வந்த போது அவர் செல்ல வேண்டிய ரயில் கிளம்பிச் சென்று விட்டிருந்தது. அடுத்த ரயில் அதிகாலையில் தான் வரும்.

அமைச்சராக இருந்தாலும் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை. அவருடைய துறை அதிகாரிகளையோ, ரயில் நிலைய அதிகாரிகளையோ எவரையும் அணுகவில்லை. பேசாமல் ஒரு துண்டை விரித்துப் பிளாட்பார பெஞ்ச்சில் படுத்துக் கொண்டார்.

இப்போது நினைத்துக் கொண்டாலும் கண்ணீர் வருகிறது இல்லையா?

நடு இரவில் ரோந்து வந்த ரயில்வே காவலர்கள், இவரை யாரென்று அடையாளம் தெரியாமல் லட்டியால் இரண்டு தட்டுத் தட்டி எழுப்பினர். "யார் நீங்கள்? எழுந்து செல்லுங்கள். இங்கெல்லாம் இந்த மாதிரிப் படுக்கக் கூடாது" என்றனர்
.
அதற்குக் கக்கன், அமைதியாகப் பதிலளித்தார். "அய்யா என் பெயர் கக்கன்.
நான் போலீஸ் மந்திரியாக இருக்கிறேன். சென்னைக்குச் செல்ல வேண்டிய ரயிலைத் தவற விட்டு விட்டேன். அடுத்த ரயில் காலையில்தான் வரும், அது வந்தவுடன் சென்று விடுகிறேன். அதுவரை இங்கு படுத்துக் கொள்கிறேன்" அனுமதி கொடுங்கள்" என்றார்.

அதிர்ந்து போனார்கள் அந்தப் போலீஸ்காரர்கள். "அய்யா மன்னித்து விடுங்கள். உங்களை அடையாளம் தெரியாததால் இவ்வாறு தவறு செய்து விட்டோம். நீங்கள் முதல் வகுப்பு ஓய்வறையில் போய்ப் படுங்கள். ரயில் வரும்வரை நாங்கள் காவலுக்கு இருக்கிறோம்" என்றனர்,
அதற்குக் கக்கன், "அதெல்லாம் எதுவும் வேண்டாம். இந்த வசதியே எனக்குப் போதும், இங்கேயே படுத்துக் கொள்கிறேன்" என்று அந்தப் பெஞ்ச்சிலேயே படுத்து உறங்கிவிட்டார். காலையில் அவர் ரயில் ஏறும் வரை அங்கேயே போலீசார் நின்றிருந்து பத்திரமாகப் பார்த்துக் கொண்டனர்.

இதை இன்னுமொரு செய்தியாகப் படித்து விட்டு மறந்து விட்டுப் போகாதீர்கள். இதைப் படித்த பிறகாவது கட்சிச் சார்பை மறந்து துறந்து விட்டு, நேர்மையான தலைவர்களுக்கு வாக்களிக்க உங்கள் மனதை மாற்றிக் கொள்ள முயற்சியுங்கள். மேலும் கட்சி வெறி கொண்டு பொதுப் பணத்தைத் திருடும் அரசியல்வாதித் திருடர்களை
ஆட்சியில் அமர்த்துவதற்காக வாக்களிக்கும் முட்டாள்களைத் திருத்தவும் பாடுபடுங்கள். இதுவே நீங்கள் நாட்டுக்குச் செய்யும் கடமையாகும்.

அமரர், திரு. கக்கன் அவர்கள், அமரர். திரு. காமராஜர் அவர்கள்,
அமரர். திரு. ராஜாஜி அவர்கள், அமரர், திரு. ஓமந்தூரார் அவர்கள்,
அமரர், திரு. ப்ரகாசம் அவர்கள் ஆகியவர்கள் இருந்து ஆண்ட தூய்மையான முதலமைச்சர் நாற்காலி இன்றிருப்பது!
இதே நாற்காலியில்,
தான் அகங்கார மமதையும் அதிகார மமதையும் பணப் பேய் மனப் பான்மை கொண்டவர்களும் அத்தனை ஆண்டுக் காலத்திற்கு ஆட்சியில் இருந்தார்களே!

அது நம் தமிழகத்திற்கு எவ்வளவு பெரிய மானக் கேடு!

ஒரே ஒரு ரூபாய் ,மட்டுமே அரசிடமிருந்து சம்பளமாக வாங்கிக் கொள்வதாகச் சொல்லிக் கொண்டு, ஒன்பது இலட்சம் கோடி சொத்துச் சேர்த்து,
ஆயுள் முழுவதும் ஒற்றை மரமாக வாழ்ந்து,
எண்ணற்ற நோய்களில் விழுந்து,
தன்னை விடக் கேடுகட்ட குணங்களைக் கொண்ட ஒரு பெண்ணின் தயவில் இருந்து, இறுதியில் உடல் நைந்து நாற்றமெடுத்து ஒரு முன்னாள் முதல்வர் இறக்க நேர்ந்ததே,
அதை நினைத்துக் கொண்டாவது நல்லவர்களுக்கு வாக்களித்து அரசக் கட்டில் அமர்த்த வேண்டும் அல்லவா?

அக ஒழுக்கமும் புற ஒழுக்கமும் இல்லாத அரசியல் வியாபாரத் தரகர்களை ஆட்சிக் கட்டில் அமர்த்தல் நாம் அந்த நாற்காலிக்குச் செய்யும் ஒரு மாபெரும் அவமானம் அல்லவா?

மிக்க நன்றி!
வணக்கம்!

---- செல்வப் ப்ரியா - சந்திர மௌலீஸ்வரன் மகி.
--- 20, அக்டோபர் -2021

எழுதியவர் : செல்வப் ப்ரியா - சந்திர மௌ (20-Oct-21, 6:41 pm)
பார்வை : 98

சிறந்த கட்டுரைகள்

மேலே