நிழலும் நிஜமும்

அன்று நிழல் போல்
உன்னை தொடர்ந்து வந்து
காதல் செய்தேன்
உந்தன் காதலனாக...!!

நீ எந்தன் நிஜமான பின்பும்
உன் நிழல் போல் தான்
இன்றும் உன்னை
தொடர்ந்து வருகிறேன்
உந்தன் மணாளனாக...!!

நிஜத்தை நிழல்
என்றும் தொடர்ந்து
வரும் என்பதற்கும்
நிஜத்தையும் நிழலையும்
காலத்தை தவிர யாராலும்
பிரிக்க முடியாது என்பதற்கும்
நீயும் நானுமே நல்ல சாட்சி....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (21-Oct-21, 9:57 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : nilalum nijamum
பார்வை : 217

மேலே