காதல் ஒரு அவசியமான போதை மருந்து

கடலை பற்றி பேசுவதும் காதலை பற்றி பேசுவதும் ஒன்று
இரண்டுக்கும் அளவில்லை என்பதை சொல்கிறேன் இன்று
ஒரு ஆண் ஒரு பெண்ணின் மீது ஆசை வைப்பதுவே காதல்
அந்த பெண்ணும் அவனை காதலித்தால் மனமொத்த காதல்
காதல் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்து பேச பழக துடிப்பது
நெருக்கம் அதிகரிப்பின் இருவரையும் மெய்மறக்க வைப்பது
சில வாரங்கள் மாதங்கள் சுக வருடங்கள் என்று தொடர்வது
பொதுவாக எல்லா காதல்களின் முக்கிய நோக்கம் மோகமே
அதனால்பித்தாய் போகிறது இருவரின் மனமும் தேகமுமே
மோகவலையில் இருவரும் வயப்பட்டால் பெரும்பாடு தான்
காதல் திருமணத்திற்கு வாய்ப்பு இல்லையேல் கூப்பாடுதான்
சிலரது காதல் கருகி கனவாகி போகிறது, சிலரது நினைவாகி
காதல், திருமணத்தில் முடியின் பசுமை ஆகிவிடும் கனவாகி
காதலிக்கையில் இருக்கும் சுகம் திருமணமாகி பின் வருமா?
ஒருவரை காதலித்து வேறொருவரை மணந்தால் அது சுகமா?
வேறொருவரை மணந்தால் இன்ப காதல் சுகம்தான் வருமா?
காதல் வெறும் கனவு, வாழ்க்கை விரக்தி என்று முடிவாகுமா?
காதலித்தவளை வேறொருவன் கைபிடித்தால் மனம் ஏற்குமா?
காதலின்றி திருமணம் செய்யின் வாழ்க்கை தான் இனிக்குமா?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (21-Oct-21, 3:51 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 132

மேலே