சனிப்படை தமிழை ஒழிக்கும்

நேரிசை ஆசிரியபபா
திராவிடம் என்றால் விளக்கம் என்ன
திராவிடம் என்ற சொல்லைத் தமிழன்
எங்குமே எதிலெழு னானாம் இயம்பும்
தொல்காப பியன்முதல் கம்பன் வரையில்
யாராம் பயன்படுத் தியது சொல்லும்
நீயிதை சற்றும் சிந்தித் ததுண்டா
நாய்குலைக் கநீயும் குலைப்பை யோசொல்
வெளிநாட் டான்தன் மதத்தை பரப்ப
வந்தவன் நம்மை யாரென் றமுதல்
அடையா ளமும்தமி ழரென்று கூறாத்
திராவிட னென்றான் ஆயிரத் தெட்நூற்
றறுபதில். அந்த சொல்லால் ஏனோ
கவரப் பட்டார் படித்தவ னும்படி
யானுமே. தமிழுக் கன்றுதான் சனியும்
பிடித்து வாட்டுகின் றதின்று வரையில்
சனிப்படை யாம்திரா விடக்குஞ் சுகளும்
ஒருசனி தாங்கோம் நாமும்
சனிப்படை இனிநாம் விரட்டு வோமே

எழுதியவர் : பழனி ராஜன் (22-Oct-21, 11:37 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 40

மேலே