தீ நட்பினர் சேர்க்கையால் பெரியோர் விட்டுப் பிரிவர் – அறநெறிச்சாரம் 100

நேரிசை வெண்பா

குற்றத்தை நன்றென்று கொண்டு குணமின்றிச்
செற்ற முதலா உடையவரைத் - தெற்ற
அறிந்தாரென்(று) ஏத்தும் அவர்களைக் கண்டால்
துறந்தெழுவர் தூய்க்காட்சி யார் 100

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

தீமையை நன்மையாகக் கருதி நற்குணமென்பது சிறிதுமில்லாமல் வெகுளி முதலியன உடையவர்களை, மாறுபட,

அறிவாளிகள் என்று கருதித் துதிப்பவர்களைப் பார்த்தால் நல்ஞானம் உடையோர் அவர்களை விட்டு நீங்குவர்.

குறிப்பு: தூய்க் காட்சியார் கண்டால், துறந்தெழுவர் என முடிக்க. தெற்ற - தெளிவாக எனலுமாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Oct-21, 3:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே