இமைக்கா நொடி கொண்டு இவளை காண

அறம் செய்ய விரும்பு ஆத்திச்சூடி
காதல் செய்ய விரும்பு என்பதே அரும்பு பருவ வாலிப மனதின் முடிச்சூடா முடிச்சூடி


பார்க்க பார்க்க ரசிக்கும் ...அழகு ...பரவசத்தில் மனம் லயிக்கும் ...பாங்காய் அவள் நடக்கும் நடையின் நளினம் கண்டே...

இமைக்கா நொடி கொண்டே இவளைக் காண கண்ணும் சுட்டும் கருவிழி பார்வையால் ..
வழியில் வந்தவள் யென்விழியில் விழுந்தாள் ...எழவில்லை நான் காதல் வாசலில் இருந்து...

இது இனக்கவர்ச்சியா...அல்லது உள்ளத்து உணர்ச்சியா...இதை பற்றி அறியாமலே பற்றினேன் பற்றாக அவள் மேல் அன்பு கொண்டே...

எனை ஏறெடுத்தாள். .....எனையே

எழுதியவர் : பாளை பாண்டி (22-Oct-21, 8:10 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 230

மேலே