ஆகாப்பசுவின் பால் - அறுசீர் ஆசிரிய விருத்தம்

ஆகாப்பசுவின் பால்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

விஞ்சு வரணை தாராநோய்
..மிகுத்துச் சுழலல் வெண்புள்ளி
துஞ்சி யலைந்து மலமருந்தல்
..சுடுகா டேகி யெலும்புணலிவ்
வஞ்சு வகையி னாவின்பால்
..ஆகா தணுகிற் றிரிதோஷம்
நெஞ்சி லடையுங் கயநோயா
..நிறைந்த வயதுங் குறைந்திடுமே

- பதார்த்த குண சிந்தாமணி

அரணை நோய், தாரா நோய், வெண்புள்ளி, மலம் அருந்தல், சுடுகாட்டு எலும்புண்ணல் ஆகிய நோய்களை யுடைய பசுக்களின் பால் முத்தோடங்களும் மார்பில் சேர்ந்து விளைவித்து ஆயுளைக் குறைக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Oct-21, 9:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே