வாழ்க்கை தத்துவம்

🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

*என் மொழி*

படைப்பு *கவிதை ரசிகன்*

🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

பணத்தை
சேர்த்து வைப்பதோடு அதைக்கொண்டு
புண்ணியத்தையும்
சேர்த்து வை.....
பணத்தால்
காப்பாற்ற முடியாத
சில ஆபத்துக்களில்
உன்னை
புண்ணியம் தான்
காப்பாற்றும் என்பதால்....!

🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧

"முடியும் வரை
முயற்சி செய் "என்று
யாரிடமும் சொல்லாதீர்கள்.... !!!
அது
முடியாமலும் போகலாம்....
"முடிக்கும் வரை
முயற்சி செய்" என்று
சொல்லுங்கள்
அது முடியாமல் போகாது....!!!

🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧


கடினமாக
உழைக்காதவன் கூட உயர்ந்திருக்கலாம்....!!!
ஆனால்
கடினமாக உழைத்தவன்
ஒரு நாளும்
தாழ்ந்தது இல்லை.....!!!

🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧🧧

திறமையை விட
தன்னம்பிக்கையே
வரலாறு அதிகம் பேசுகிறது...!
ஏனெனில்
திறமையை விட
தன்னம்பிக்கையே
வரலாற்றில்
அதிக பக்கங்களை
பிடித்துள்ளதால்....!!!

*கவிதை ரசிகன்*


🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

எழுதியவர் : கவிதை ரசிகன் (22-Oct-21, 10:15 pm)
பார்வை : 38

மேலே