தீபாவளி திருநாள்

தீபாவளி திருநாள்

இரவு முடியும் முன்னேயே வந்ததே தீபாவளி திருநாள்
எங்கும் இன்பம் பொங்கும் இனியதொரு நன்னாள்
வண்ண ஜாலங்களால் வானை அலங்கரிக்கும் வெடிகளும்
தரையில் வெடித்து அசத்திப் பூச்சொரியும் வர்ண சட்டிகளும்
வாணவெடிக்கைக்கு அழகூட்ட வரும் கம்பி மத்தாப்புகளும்
வானவில்லை சவாலுக்கு அழைக்கும் புதுச் சேலைகளும்
வழியெல்லாம் கண் சிமிட்டும் அழகிய வண்ண விளக்குகளும்
கண்கவர் ஆடையில் வண்ணத்திபூச்சிபோல் ஓடும் குழந்தைகளும்
வீட்டாரும் உறவினரும் ஒன்று கூடி விருந்தினை படைத்திட
இலை நிறை திண்பண்டங்களும் பல்சுவை உணவு வகைகளும்
கண்ணுக்கு விருந்தளித்த வெடிகளை பொறும வைக்கும் விதமாக
விடியலை ஒளியாக்கி எங்கும் ஓசையுடன் பட்டாசுகள் வெடித்திட
முதியோரை வணங்கி ஆசி பெற்று நரகாசுரனை வென்ற நாளை
குவலயம் முழுதும் கொண்டாடி மகிழ்ச்சியில் திளைத்ததுவே !

எழுதியவர் : கே என் ராம் (23-Oct-21, 1:33 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 15

மேலே