தாராய் ஒன்று தாராய்

மடைதிறந்த வெள்ளம் மதகுவழி ஆர்ப்பரிப்பது போல் யென் நெஞ்சம்
ஆராதித்தது தென்றலாய் வந்தெனை தீண்டும் அவள் விழிபார்வையை ...குதுகலமாய்

கிழக்குமலைத்தொடர்ச்சியும் மேற்குமலைத்தொடர்ச்சியும் சந்திக்கும் தொட்டபெட்டா சிகரம் மலைமுகடு க்கு ஆடைஅணிவித்தாற் போல் பச்சைசேலை பாங்காய் உடுத்தி யென்இச்சையை கூட்டினாள் ..

சரலேன சறுக்கி செல்லும் சாய்தளம்
என்விழியை வழிமாற்றியது உடையை மிஞ்சிய இடையின் விலகல் மின்னல்ஒளிக்கற்றையில்

பந்திக்கு முந்தும் பசியைவிட வேகமாக முந்தியது அவள் முந்தி சேலையில் அவள் சாலையை கடக்கும்போது முன்சென்று...

என்நெஞ்சத்தில் தன்னைத் தவறவிட்டவள் தாரா ...நீயே வாராய்
யென் தாரமாய் ...நயன்தாராவே...
அழகியே ... தாராய் ...ஒன்று தாராய்...
யெனைஒன்றி தாராய்...நனிமுத்தம் .

எழுதியவர் : பாளை பாண்டி (23-Oct-21, 7:47 am)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 132

மேலே