திருமணம் வேண்டாம்

திருமணம் வேண்டாம்.

வேண்டாம்
என்று சொல்,
அத்தை மகள்(ன்)
மணமகள் (ன்) என்றால்!
திருமணம் வேண்டாம்
என்று சொல்.

ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகள்,
" அத்தை மகள்
இரத்தினத்தை அத்தான்
மறந்தாரோ......."
பாடியது போதும்,
நோயுள்ள இனம்
படைத்ததும் போதும்.

வேண்டாம்
என்று சொல்,
இந்தத் திருமணம்
வேண்டாம்
என்று சொல்.

ஆக்கம்,
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (23-Oct-21, 8:07 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : thirumanam ventaam
பார்வை : 57

மேலே