இயற்கை

நாம் கேட்காமலேயே நமக்காக சுப்ரபாதம்
ஒருநாள் தவறாது பாடும் சோலைக்குயில்கள்
மொட்டாய் இருந்து மலர்ந்து நம் மனதை
மகிழ்விக்கும் மல்லிகையும் முல்லையும்
தடாகத் தாமரையும் அல்லியும் என்று
நமக்கு தாய்ப்போல் ஆதரவாய் இருக்கும்
இயற்கைக்கு நாம் செய்யும் கைம்மாறு ......!!!!
ஏதும் இல்லையே என்று நினைக்க
வெட்கி தலைக் குனிய வைக்கிறதே இயற்கை
.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Oct-21, 9:47 am)
Tanglish : iyarkai
பார்வை : 146

மேலே