கருமைக் கவிஞன்

கவி எழுதத் துடிக்கும் கருமை நிறக் கவிஞனின்

பேனாவில் கண்ணீர்த் துளிகளே மை யாகவும்,

கைக்குட்டை நனையக் காத்திருக்கும் வியர்வைத் துளிகளே
காகிதமாகவும்,

கல் நெஞ்சம் படைத்த பெண்ணவள் கருங்கூந்தல் காரிருள் மேகமாகவும் ,

மெல்லத் திறந்த கதாவக
காதல் சொல்லத் தவிக்கும் என்னவளின் கண் இமைகளே வானவில்லாகவும்,

செக்கச் சிவந்த வானம் போல்
வர்ணம் பூசப்பட்ட செவ்விதழ்களே
செல்லக் குடையாகவும்,

மஞ்சள் கொஞ்சும் பொன்னான பெண்ணவள் பிஞ்சு முகக் காதலை அடை மழையாகவும்

வர்ணித்து எழுத வார்த்தை ஒன்றைத் தேடினான் தீராத காதலோடு........

எழுதியவர் : Ramkumar (24-Oct-21, 1:16 pm)
சேர்த்தது : ராம் குமார்
பார்வை : 102

மேலே