வாழ்க்கை என்ற ஓடத்தில் கடக்கும் பல்வேறு வேடங்கள்

மனித ஜென்மம் என்றால் பல்வேறு வேடங்களை தரித்துதான் ஆக வேண்டும்
குழந்தையாக பிறந்ததுமே முதல் வேடம், நினைவுக்கு எட்டாத முதல் பாடம்
உடன் பிறந்தவர்கள் இருப்பின் சகோதரன் சகோதரி என்று இயற்கை வேடம்

கற்கையில் மாணவன் மாணவி என்ற வேடம்,பள்ளி கல்லூரி இதற்கு கூடம்
வருங்காலத்தில் ஆருயிர் நண்பன் அமைய வாய்ப்பு கொடுக்கும் அரிய தடம்
பருவம் கற்றுத்தரும் காதல் பாடம் படிக்கும் கிளுகிளுப்பான வேடம் துவக்கம்

சொந்த காலில் வாழ பணியாளர் என்ற வேடம் அவசியம் அத்தியாவசியமும்
வேலை கிடைத்த பின் விட்டகுறை தொட்டகுறை காதலை தொடரும் வேடம்
காதலிக்கும் காரணம் மற்றும் குறிகோளை பொறுத்து காதலின் தடம் மாறும்
காதலித்தவரை கல்யாணம் செய்ய முடியாமல் இருக்கும் நிலையே அதிகம்
காதலிக்கும்வரை காதலன் காதலி என்கிற வேடத்தில் புதுமை அனுபவங்கள்

அடுத்தது என்ன செய்ய என்று ஆலோசனை செய்யுமுன்பே திருமண வேடம்
கணவன் மனைவி என்று, ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து ஏற்கும் வேடம்
தேனிலவு பகலிரவு என கொஞ்சமும் வஞ்சமின்றி சதிராட்டம் போடும் வேடம்
அதற்கு பிறகு என்ன நினைத்தாலும் தப்பிக்கமுடியாத பெற்றோர்கள் வேடம்
இந்த வேடமே ஒருவரின் திறமை, உழைப்பு குணங்களை சோதிக்கும் வேடம்
தாய் தந்தை என்ற மிக உயர்ந்த இடத்தை பெற்று தருகின்ற வாழ்க்கை வேடம்

எவ்வளவு வேடங்கள் தரிப்பினும் நல்ல நண்பன் என்ற வேடம் அருமையானது
நண்பனென்று சொல்ல நூற்று கணக்கில் நண்பர்கள் இருப்பினும் பெருமையல்ல
உயர்ந்த உத்தம உயிர் காக்கும் நண்பனாக அமையும் ஓரிரு நட்புகள் அமைந்தால்
அது ஒருவனின் கவலையை கடக்க மகிழ்ச்சியில் மூழ்க உதவும் சிறப்பு வேடம்
என் வாழ்க்கையில் இளமை பருவத்தில் ஆருயிர் நண்பர்கள் இருவர் இருந்தனர்
தற்போது ஒருவர் இவ்வுலகில் இல்லை, இன்னொரு நண்பர் இருந்தும் இல்லை!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (24-Oct-21, 10:51 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 130

மேலே