போட்டி

போட்டி.

மனிதனோடு பிறந்த
"மனம்"
மனிதர்களை இயக்கும்
இயந்திரம்,

வாழவும் வைப்பான்,
அழியவும் வைப்பான்.

அறிவுக்கும்
மனத்திற்கும்
நடக்கும் போட்டி!
வாழ்வும் அழிவும் - அது
கடவுளுக்கும் 🌕
சைத்தானுக்கும் 🌚
நடக்கும் போட்டி!.

அறிவு வென்றால்
கடவுள் வென்றான்.
முடிவு வாழ்வு 💛
மனம் வென்றால்
சைத்தான் வென்றான்.
முடிவு அழிவு 🖤

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (25-Oct-21, 8:26 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : POTTI
பார்வை : 58

மேலே