மௌனம் சாதிக்கமுடியும் என்றால் தியானமும் சாதிக்க முடியும்

மௌனமாக பத்து நிமிடங்கள் இருத்தல் பெரிய காரியம்
மூன்று மணி நேரம் மௌனம் காப்பது இன்னும் கடினம்
அடுத்த நிலையாக 10 நிமிடங்கள் தியானிப்பது கடினம்
ஒருமணி நேரம் தியானம் செய்தல் இன்னமும் கடினம்
தியானம் செய்கையில் மனதினில் ஓடும் எண்ணங்கள்
இதை கடந்து மனதை ஒருநிலை படுத்துவது சுலபமா?
ஒருநோக்கு நிலையில் அடிமனத்திற்குள்ளே நுழைந்து
எண்ணங்களே உதிக்காத ஒரு நிலை காண்பது என்பது
எவெரெஸ்ட் சிகரத்தை எட்டுவதை விட கடினம் தான்
மௌனம் தியானம் போன்றவைகள் வேலையற்றவன்
செய்யும் வேலைகள் என்கிறீர்களா? அப்படி என்றால்
நான் விடும் சவாலை நீங்கள் எதிர்கொள்ள முடியுமா?
சிறிது நாட்கள் கொஞ்சம் முன்னதாகவே கண்விழித்து
நான் குறிப்பிட்ட மௌனத்தை முதலில் அதன் பின்னர்
தியானத்தின் மூலம் ஆழ்மனத்திற்குள் இறங்கி சென்று
எண்ணங்களே இல்லாத நிலையை, அதிகம் வேண்டாம்
ஒரு நிமிடம் , அதாவது 60 வினாடிகள் இருக்கமுடியுமா
செய்து பார்த்து எனக்கு தகவல் தெரிவியுங்கள் நண்பரே
நமக்கு ஒரு தம்பிடி உபயோகம் இல்லாத விஷயங்கள்
நமக்கு தெரிந்தும் தெரியாமலும் செய்கிறோம்தானே ?
அத்தகைய வேலைகளை ஒரு வாரத்திற்கு குறைத்து
நான் சொன்ன தியானத்தை துணிவுடன் நேர்மையாக
செய்துபார்த்து உணர்ந்த அனுபவங்களை பகிருங்கள்!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (25-Oct-21, 11:22 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 196

மேலே