கொஞ்சிப்பட்டை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மாந்த மகற்றும் வயிற்றுப் பிசந்தவிர்க்கும்
மாந்த கணச்சுரத்தை மாற்றிவிடும் – சே’ர்’ந்தசிறு
வாதநோ யோட்டும் வகைகொஞ்சிப் பட்டையது
மாதரசே நீயுமுணர் வாய்

- பதார்த்த குண சிந்தாமணி

காட்டுக் கொஞ்சிப்பட்டையானது பாலர் மாந்தம், வயிற்றுப் பொருமல், கணச்சூடு, வாதநோய் இவைகளைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Oct-21, 10:47 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே