அறமே ஒருவனுக்கு என்றும் துணையாகும் – அறநெறிச்சாரம் 14

நேரிசை வெண்பா

ஈட்டிய வொண்பொருளும் இல்லொழியும் சுற்றத்தார்
காட்டுவாய் நேரே கலுழ்ந்தொழிவர் - மூட்டும்
எரியின் உடம்பொழியும் ஈர்ங்குன்ற நாட!
தெரியின் அறமே துணை. 14.

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

குளிர்ந்த மலைநாட்டுக்கரசே! தேடிய சிறந்த செல்வமும் மனையிலேயே நின்றுவிடும்,
வீட்டை விட்டே சென்று அழிந்து விடும்;

உறவினர்கள் சுடுகாட்டு வரை கூட அழுது கொண்டு வந்து நீங்குவர்.

மூட்டப்படுகின்ற நெருப்பால் உடலும் அழிந்து விடும்.

ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ஒருவனுக்குத் துணையாவது அறமேயாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Oct-21, 12:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 55

மேலே