என் காதல் அவள் மேல் தான்
அவள் வெட்கம் கொண்டு ஒளிந்தாள் மேகம் யெனும் சேலையின் பின் என்மேல் மோகம் கொண்டு ...அவள் பெயர் நிலா
இன்னொருவள் எனைக்கண்டு கண்சிமிட்டினாள் மின்னியது பால்வெளி ... அவள் பெயர் மின்னல் மின்னியது அவள் விழியோ...
எனை காணாமல் வாட்டம் கொண்டவள் என்மேல் நாட்டம் கொண்டு ...இவைகள் மீது கொண்டாள்... சீற்றம்...
இடித்து வெடித்தது வானம்... அவள் பெயர் இடி...
இவைகள் எல்லாம் எனக்காக எதையும் செய்திட ...என்னில் ஏது மாற்றம் ...அசராமல் உமிழ்ந்தேன் அக்னி...
எனை குளிர்விக்க... என்சினம் தணிக்க... தனையே தந்தாள் மாசில்லா தண்மை கொண்டவள்...
அவள் பெயர் மாரி...
அவளே மாதம் மும்மாரி என மழை பொழிந்தாள் உலகிற்கே... என் ❤️ காதல் அவள் மேல் தான் ....
என்
பெயர்
கதிரவன்
எண் திசையும் எனது ...கிழக்கில் நான் உச்சம்...