இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

புல் மீது மின்னும் பனித்துளிகளே
தீபவொளியே!

விண் மீது மின்னும் விண்மீன்களே
தீபவொளியே!
பகலின் அதிபன் கதிரவனே
தீபவொளியே!
இரவின் அரசி வெண்மதியே
தீபவொளியே!
கண்ணில் மின்னும் கருணை அன்பே
தீபவொளியே!
உள்ளத்து இருளை எரிக்கும் உண்மையே
தீபவொளியே!
உலகை படைத்து காக்கும் பரம்பொருளே
தீபவொளியே!
உனக்குள் சுடரும் மெய்ப்பொருளே
தீபவொளியே!
இனிய தீபாவளி வாழ்த்துக்ககள்!!

எழுதியவர் : (28-Oct-21, 11:07 pm)
சேர்த்தது : பிரதீப்
பார்வை : 27

மேலே