நீராதாரம் - நீரே ஆதாரம்

பஞ்சபூதங்களில் ஒன்று தான் 'நீர்'
இந்த நீர்தான் எவ்வளவு சிறப்புமிக்கது?

இதை அறியாதோர் யார் ?
இதில் என்ன புதிதாக உள்ளது?
என்று தோன்றலாம்.

ஆனால் ஒரு தாய் தன் குழந்தை பிறந்தவுடன் பொறுப்பை துறந்து
விடுவதில்லை,

அனுதினமும் அதை
காத்து, வளர்த்து, குழந்தைக்கு வளத்தையும், நலத்தையும், சேமித்து தருகிறாள் அல்லவா? அதுதான் சிறப்பு.

தாய் இன்றி சேய் வளராது,
நீரின்றி உலகம் அமையாது!

அதனால்தான், தான் படைத்த அம்மதிப்பு மிக்க நிரை, தன்னுடனேயே, தன் தலை மேல் வைத்து காக்கிறரோ இறைவன்
என்று கூட தோன்றுகிறது அல்லவா ?

மேலும் மனிதனின் கால்களில் மிதிப்பட்டாலும் அவனையும்
தலையில் தூக்க வைத்து
விடுகிறதல்லவா அந்நீர்?


அதுதான் நீரின் மதிப்பு !
அதுவே உயிரினம் உணர
வேண்டிய 'முக்கிய படிப்பு'.

நிலத்தை காப்பது 'நீர் '
பயிரை வளர்ப்பது 'நீர் '
பசுமையை அளிப்பது 'நீர்'

தாகத்தை தணிப்பது 'நீர்',
வாழ்வை காப்பது 'நீர்',
ஏன், இறுதியில் கரை சேர்ப்பதே
அந்த 'நீர்',

நினைத்துப் பார்ப்போம்,
அந்த 'நீர்' இல்லை என்றால் ?

சுத்தம் இல்லை, சுகாதாரம் இல்லை,
வளமும் இல்லை, இன்னும் சொல்லப்போனால் புவி வாழ்க்கையே இல்லை!.

தாகம் எடுத்து விட்டால்?
விலங்கென்ன ? மனிதனென்ன ?
வேகம் எடுத்து விட்டால் ?
கடலென்ன? கரையென்ன ?

தனக்கென உருவமில்லா அந்நீர் அனைத்திலும் அடங்குகிறது ,
அனைத்தையும் அடக்குகிறது,
எதையும் சுத்தமாக்குகிறது,
எதிலும் சத்து சேர்க்கிறது.

அந்த நீரின் நிலையை கணிக்க வேண்டாமா?
அதன் உபயோக சிக்கனத்தை,
உணர்ந்து பயணிக்க வேண்டாமா?


சிறப்புமிக்க அத்தகு நீர் வளத்தை காத்து,
நீர் ஆதாரங்களை மேலும் சேர்த்து ,
மழை நீரை சேமித்து,
அவற்றை அக்கறையுடன் பராமரித்து வந்தால்,

எதிர்காலம் செழிக்கும் ,
வருங்காலம் கொழிக்கும்.

காப்போம் நீர் வளம்,
சேர்ப்போம் இப்பூமிக்கு நலம்!"

எழுதியவர் : (30-Oct-21, 7:20 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 213

மேலே