கற்க மாட்டாயோ

கற்க மாட்டாயோ

ஒழுகிசை அகவல் ஓசை உடைய
நேரிசை ஆசிரியப்பா

உன்னைப் பற்றி எழுதென நீயார்
நீயா ரெனவுன் பெற்றோர் இட்டபேர்
ஆணா பெண்ணா தெளிவு செய்வாய்
நுழைய யில்பொய் புனைப்பெயர் எதற்கு?
மறைத்து நீமறைந் தெழுதல் ஏனாம்?
இன்றே மாற்றி எழுது வாயே
தகைமை சொல்வாய் கல்வித் தொழிலிலும்
தமிழில் செய்த தொண்டும் விருப்பமாய்
தளத்தில் செய்திட இருப்பது விளம்புமே
தோசை யிட்டிலி பிடிக்கும்
யென்பதேன் கற்பே னென்றுசொல் லாயோ

எழுதியவர் : பழனி ராஜன் (30-Oct-21, 11:27 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : karka maattaayo
பார்வை : 46

மேலே