மேகம்
மெல்லிய காற்றோடு
மேலாடையாக மேகத்தை போட்டு வந்தவள் இவள்
கண்ணில் நீர் கோர்க்கும்
முன்பு தரையில் தடம் மாறாமல்
குதித்தவளும் இவளே
தான் கரு நிறம் என்பதாலே
அவள் பார்க்கும் இடமெல்லாம்
பச்சையாக வேண்டும் என அழுது புலம்பியவள்
தேங்கிய குளமாக
தேவைப்படும் போது எல்லாம்
அழுது தீர்க்கிறது மேகம்