அதியா - சதியா

ஏன்டி செல்வி உனக்கு (இ)ரட்டைக் கொழந்தைங்க பொறந்ததாமே?
@@@@
ஆமாம் பெரியம்மா. (இ)ரண்டும் பெண் குழந்தைங்க. என்னை மாதிரியே இருக்குதுங்க..
#@###
சந்தோசம்டி. மகாலட்சுமிங்க. நீதான்டி நம்ம ஊரிலயே ரொம்ப அழகான பொண்ணு. உம் பொண்ணுங்க (இ)ரண்டும் உன்னைவிட ரொம்ப அழகா இருக்கும்டி. ஆமாம் பேரு வச்சிட்டீங்களா?
@@@##@@
வச்சுட்டோம் பெரியம்மா. ஒரு குழந்தை யோட பேரு 'அதியா'. அடுத்தவ பேரு 'சதியா'.
@@#|||||
என்னடி இது... அதி, சதின்னு பேரு வச்சிட்டு. அழகான கொழந்தைங்க. அழகான தமிழ்ப் பேருங்கள வச்சிருக்களாமே. எதுக்குடி இந்திப் பேருங்கள வச்சு நம்ம தமிழையும் கொழந்தைங்களையும் கேவலப்படுத்தினீங்க?
##########
பெரியம்மா நான் பள்ளில, கல்லூரில படிக்ககிறபோதே நெறையப் பேரு "என்னடி உனக்கு 'செல்வி'னு தமிழ்ப் பேரை வச்சிருக்கிறாங்க. இந்தக் காலத்தில போயி தமிழ்ப் பேரை வைக்கிறதை ஆசிரியர்களை விரும்பறதில்ல. அவுங்க பிள்ளைகள் பேருங்களும் இந்திப் பேருங்கதான். உன்னோட அம்மா அப்பா எழுத்தறிவு இல்லாதவங்களா? அப்பிடிப்பட்டவங்ககூட திரைப் படம் தொலைக்காட்சி தொடர்களப் பாத்து உச்சரிக்க முடியாத இந்திப் பேருங்களைப் பிள்ளைங்களுக்கு வைக்கிறாங்க. போயும் போயும் 'செல்வி'ங்கிற பேரு"ன்னெல்லாம் சொல்லி என்னைக் கேவலப்படுத்தினாங்க பெரியம்மா. இந்த நிலைமை எங் குழந்தைகளுக்கு வரக்கூடாது.
#########
சரீடி. நீ சொல்லறதும் நாயம்தான். நாகரிகம் போற போக்கை நெனச்சா வெக்கமா இருக்குதடி செல்வி.
"🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁
Atiya = success, gift

எழுதியவர் : மலர் (9-Nov-21, 5:57 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 46

மேலே