ஆரியன் கம்பன்

ஏன்டி கமலா உம் பேரனுக்கு என்ன பேரு வச்சிருக்கிறாங்க?
@@@@@@
நம்ம டீவி பத்து பதினஞ்சு நாளா ஆரியன், ஆரியன்னு ஒரு பையன் பேரச் சொல்லிட்டு இருந்தாங்க. அந்தப் பையன் என்னமோ கானுங்கிற நடிகரோட பையனாம். அந்த 'ஆரியன்' (Aryan)ங்கிற பேரைத்தான் எம் பேரனுக்கு வச்சிருக்கிறாங்க.
@@@@@@
நம்ம பகுதியில (1960களில் கொங்கு மண்டலத்தின் ராகி/,கேள்வரகு என்பதை கிராமப் பகுதிகளில் 'ஆரியம் என்று மக்கள் கூறுவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்) தோட்டங்கள்ல ஆரியம் நாத்து நட்டு தண்ணி பாச்சி நல்லா வெளஞ்சதும் கதிரு அறுத்து காயவச்சு களத்தில தாம்பு கட்டி ஓட்டின பொறகு தூவிப் பொடச்சா ஆரியம் கெடைக்கும். இந்தப் பேரைக் கேள்விபாபட்டு அந்த கானு நடிகரு தன்னோட பையனுக்கு 'ஆரியன்' (Aryan)னு பேரு வச்சிருப்பாங்க.
@@@@@#@
"ஆமான்டி நீ சொல்லறது சரியா இருக்கும்டி. எம் மவன் மனைவிக்கு போன வாரம் ஆம்பளப் பையன் பொறந்தது உனக்கு தெரியுமல்லவா? 'ஆரியம்' 'ஆரியன்' (Aryan)ஆகும்போது 'கம்பு' ஏன் 'கம்பன்' ஆகக்கூடாது. எம் பேரனுக்கு 'கம்பன்'னு பேரு வைக்க நாங்க முடிவு பண்ணீட்டோம்.
@|||||@@@@@@@
நல்லது யக்கா. பொருத்தமான பேரு. ஆரியத்தை அரச்சு மாவாக்கினாத்தான் களி செய்யமுடியும். கைதிகங்க களியைத் தின்னுட்டுத்தான் உள்ள இருந்துட்டும் அட்டகாசம் பண்ணறாங்க. திருந்தாம வெளில வந்தும் அட்டகாசம் பண்ணறாங்க.
■■■■■◆■◆◆◆◆◆◆◆◆■■■■■■■■■■■
Aryan = illustrious, noble, spiritual. Sanskrit masculine name.

எழுதியவர் : மலர் (11-Nov-21, 5:03 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 71

மேலே