சோகம்

தமிழ்ப் பெயர்களுக்குக்
கடுமையான பஞ்சம்!
இந்திப் பெயர்களைச்
சூட்டி மகிழ்வதே
பெரும்பாலான தமிழர்களுக்கு
பெருமை சேர்க்கும் மஞ்சம்.

உலகத் தமிழர்களில்
யாருமே தம்பிள்ளைக்குச்
சூட்டாத பெயரொன்றைத்
தேர்வு செய்தோம்
தவமிருந்து பெற்ற
எங்கள் அருமை மகனுக்கு.

ஆவல் பொங்கக்
காத்திருக்கும் அன்பர்களே
அப்பெயர் என்ன தெரியுமா?
'ஸோஹம்' என்ற
இனிய இந்திப் பெயர்.
தமிழ் சோகம் என்று
தவறாகப் பொருள் கொள்ளாதீர்!

தமிழ்ப் பெெயரைத்
தம்பிள்ளைக்குச் சூட்டிய பெற்றோரையும்
தமிழ்ப் பெயர்
சூட்டப்பட்டுள்ள
குழந்தைகளையும்
ஒரு மாதிரியாகப்
பார்ப்பதே இக்காலத்
தமிழரின் வழக்கம்

தமிழாசிரியர்கள்
தமிழ்ப் பேராசிரியர்கள்
தமிழை வளர்க்கும்
பொறுப்பில் உள்ளவர்களே
அவர்கள் பிள்ளைகளுக்கு
தமிழ்ப் பெயர்களைச்
சூட்டுவதில் விருப்பம் கொள்ளார்.

பொறியியல் படித்த நானும்
என் வாழ்க்கைத் துணைவியும்

எழுதியவர் : மலர் (14-Nov-21, 6:59 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : sogam
பார்வை : 57

மேலே