பிரிந்து சேர்ந்து சோர்ந்து பிரிந்த உறவு

பத்து வருட இடைவெளிக்கு பிறகு உயிர்தோழிகள் ராணியும் வாணியும் சந்தித்துக்கொண்டார்கள்.
ராணி"வாணி என் தோழிகளின் ராணி, என்னருகே வா நீ"
வாணி "ராணி, என் வாழ்க்கையின் தோணி, என்னை ஏற்றி விடும் ஏணி. இதோ வந்தேன் "
ராணி " நீ கல்யாணம் செய்யாமல் இருந்திருந்தால் என்னுடன் இந்தியாவிலேயே இருந்திருக்கலாம் இல்லையா?"
வாணி " ஆமாம் ராணி. இருப்பினும் கல்யாணம் செய்யாமல் இருந்தால் என் வீட்டில் என்னை சும்மா விட்டிருக்கமாட்டார்களே! அதற்கு பதில்தான் நீ கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறாயே"
ராணி " நீ தவறாக நினைத்து கொள்ளாதே வாணி.நான் கல்யாணம் ஆகி இரு குழந்தைகளுக்கு தாய்"
வாணி " ஓஒ, இது எனக்கு மிகவும் இன்ப அதிர்ச்சி தரும் விஷயம். எனக்கு ஏன் சொல்லவில்லை?
ராணி " வாணி நீ எங்கே இருக்கிறாய் என்று தெரியவில்லை. உன் தொலைபேசி என்னிடம் இல்லை. என்னுடைய பழைய செல்போன் பழுதானபிறகு உன்னை என்னால் அணுகமுடியவில்லை. உன்னுடைய ஈமெயிலும் எனக்கு தெரியாது. நீயாவது என்னை தொடர்புகொண்டிருந்தால் நம் இடையில் இவ்வளவு பெரிய இடைவெளி . ஏற்பட்டிருக்குமா?
வாணி" அப்படி இல்லை ராணி. நீ நம்பமாட்டாய். பத்து வருடங்களுக்கு முன் என்னுடைய போன் ஒன்று திருட்டு போய்விட்டது. அதனுடன் உன்னுடைய செல்போன் நம்பர் போய்விட்டது. உன்னுடைய ஈமெயிலும் எனக்கு தெரியாது."
ராணி" ஒருவேளை நான் உன்னிடம் நான் கல்யாணம் செய்துகொள்ளப்போகிறேன் என்று
சொல்லியிருந்தால் என்னை கல்யாணம் பண்ணாதே என்று சொல்லி தடுத்திருப்பாயோ என்னவோ, அதனால்தான் தெரியப்படுத்தவில்லை போலிருக்கிறது ."
வாணி " அதுவும் சரிதான் , பரவாயில்லை ராணி. நானும் இரு குழந்தைகளுக்கு தாய்"
ராணி " ஆஹா கேட்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உன் கணவர் எப்படி இருக்கிறார்?
வாணி " நாங்கள் இருவரும் விவாகரத்து வாங்கி விட்டோம்."
ராணி " ஐயோ வாணி. இந்த குழந்தைகளை வைத்து கொண்டு எப்படி சமாளிக்கிறாய்?
வாணி " குழந்தைகளுக்கு அப்பா என்று ஒருவர் இருக்கும்போது ஒன்றும் பிரச்சினை இல்லை"
ராணி "நீ என்ன சொல்கிறாய் வாணி , ஒன்றும் புரியவில்லை"
வாணி " நான் இரண்டாம் திருமணம் செய்துகொண்டு எங்களுக்கு பிறந்தவர்கள் தான் இந்த இரு பிள்ளைகள்"
ராணி " கேட்க எதோ சினிமா நாடகம் போல் இருக்கிறது வாணி. அது சரி, உன் முதல் திருமணம் ஏன் விவாகரத்து ஆனது ?
வாணி " என் மாஜி கணவர் மதிவாணன் எல்லா விஷயங்களிலும் நல்ல மனிதர் தான். ஆனால் என்னுடைய அந்தரங்க விருப்பங்களை அவரால் கொஞ்சம்கூட பூர்த்திசெய்ய முடியவில்லை. இரண்டு வருடங்கள் முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் அவரிடம் முன்னேற்றமே இல்லை. எனவே அவரிடம் பேசி அவர் சம்மதம் பெற்று விவாகரத்து செய்துகொண்டோம் "
ராணி "அடடா அப்படியா விஷயம். இங்கே அதற்கு தலை கீழ். நேரம்கழித்து வந்து படுத்தாலும் நான் தூங்கிக்கொண்டிருந்தாலும் என்னை எழுப்பி சல்லாபம் செய்தபின் தான் அவர் தூங்குவார் , என்னையும் துங்கவிடுவார்."
வாணி " அப்படியா ராணி. அந்த விஷயத்தில் நீ கொடுத்துவைத்தவள் தான். திருமணம் செய்து கொள்வது என்பது மிகவும் சுலபமான செயல் தான். ஆனால் தாம்பத்திய வாழ்க்கை வெற்றிகரமாக அமைவது என்பது எல்லோருக்கும் அமைவதில்லை."
ராணி " வாணி இரண்டாவது கணவர் உனக்கு எல்லாவித சந்தோஷத்தையும் தருகிறார் தானே?
வாணி " முதல்வரை விட பரவாயில்லை. ஆனால் அவர் சோர்வடைய நான் அதிகம் வேர்வை விடவேண்டி இருக்கிறது.இருப்பினும் மொத்தத்தில் பாஸ் . அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்."
ராணி " நீ மீண்டும் அமெரிக்கா சொல்லவேண்டுமா அல்லது இங்கேயே தங்கிவிடுவாயா"?
வாணி " மீண்டும் திரும்பி அமெரிக்கா சென்றுதான் ஆகவேண்டும். சம்பளம் இருவருக்கும் நன்றாக கிடைக்கிறது. அங்கே தினசரி வாழ்க்கை மிகவும் சௌகர்யமாகவும் பிரச்சினைகள் இல்லாமலும் இருப்பதாலும் மேலும் சுத்தம் சுகாதாரம் இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாலும் எங்களுக்கு மீண்டும் இந்திய திரும்பி வர ஆர்வம் இல்லை."
ராணி " என் கணவர் கூட அமெரிக்கா செல்வதற்கு மிகவும் விருப்பம் காட்டுகிறார். அவருடைய திறமைக்கு நிறைய அங்கே வாய்ப்புகள் இருக்கிறது என்றும் சொல்கிறார். ஆனால் நான் தான் நம் நாட்டை போல் எங்குமே அமையாது, பணம் சுகம் அதிகம் கிடைத்தாலும், இங்கிருக்கும் சமூக உறவுகள், எளிமையாக வாழும் வாழ்க்கை முறைகள், நமது அருமையான கலாச்சாரம் இவை எல்லாவற்றையும் விட நமது பக்தி மற்றும் ஆன்மிகம் இதை விட்டு செல்ல எனக்கு மனமில்லை வாணி"
வாணி " ஒரு வகையில் நீ சொல்வதும் சரியாகத்தான் படுகிறது. நீ அமெரிக்காவுக்கு சென்று படித்திருந்தால் ஒருவேளை நீ இப்படி கூறமாட்டாய் என்று நினைக்கிறேன். இருப்பினும் உன் திடமான எண்ணங்களை பாராட்டுகிறேன்."
ராணி" நான் எப்போதும் வெள்ளிக்கிழமை தான் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வருவேன். ஊரிலிருந்து வந்துள்ள என் உறவினர் நாளை ஊர்க்கு திரும்புவதால் இன்றே இந்த கோவிலுக்கு சென்று வரலாம் என்று சொன்னதால் சரி என்று இன்று புதன் கிழமை இங்கு வந்தேன். வந்த இடத்தில எதிரே பார்க்காத வகையில் உன்னை தற்செயலாக சந்தித்தேன். ஒரு வகையில் சொல்லப்போனால் இந்த கோவில்தான் பத்து வருடங்களுக்குமேல் பிரிந்த நம்மை மீண்டும் ஒன்று சேர்த்துள்ளது."
வாணி " நிச்சயமாக ராணி. நானும் இன்னும் இரண்டு நாளில் மீண்டும் அமெரிக்கா திரும்புகிறேன். நாம் மனதில் ஒருவரை ஒருவர் எப்போதும் நினைத்துக்கொண்டிருப்பதால்தான் கடவுளே பார்த்து நம்மை இன்று ஒன்று சேர்த்துவிட்டார்."
ராணி " இன்று இரவு உன்னால் எனக்கு இரண்டு மணி நேரம் கொடுக்க முடியும் என்றால் என் வீட்டிற்கு வந்து டின்னர் சாப்பிட்டு போகலாமே?"
வாணி " அதற்கு என்ன. நிச்சயம் வருகிறேன். என் கணவருடனேயே வருகிறேன். எனக்கும் உன் குழந்தைகளை பார்க்க விருப்பமே இருக்கிறது"
அன்று இரவு ஏழு மணி அளவில் வாணி தன் கணவர் கண்ணனுடன் ராணி வீட்டிற்கு சென்றாள். காலிங் பெல்லை எழுதியவுடன் உள்ளிருந்து 'கமிங்' என்று சொல்லியபடியே ஒருவர் வந்து கதவை திறந்தார். அவரை பார்த்தவுடன் வாணிக்கு தூக்கிவாரி போட்டது. ராணியின் கணவருக்கும் தான். இருப்பினும் ஒருவரை ஒருவர் அறியாதது போல் நடந்து கொண்டனர். ராணியின் கணவர் ரகுராம் வாணியின் கல்லூரி பாய் பிரண்ட். சாதாரண நண்பன் அல்ல. ஒருவரை ஒருவர் மிக நெருக்கமாக பழகியவர்கள். திருமணம் செய்யாமலேயே இருவரும் பலவித இன்பத்தை அனுபவித்தவர்கள். ஆனால் ரகுராமன் மூன்று தங்கைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பை தான் ஏற்றதால் வாணியை உடனடியாக திருமணம் செய்யமுடியாத ஒரு தர்மசங்கடமான நிலை. ஆனால் வாணியால் ஒரு வருடத்திற்கு மேல் காத்திருக்க முடியவில்லை. அதன் பிறகு இருவரிடையே உள்ள கருது வேறுபாடு அதிகமாகி , ஒரு நாள் இருவரின் நட்பும் காதலும் முறிந்தது. அதன் பிறகு தான் வாணி மேல் படிப்புக்கு விண்ணம்பம் செய்து அமெரிக்கா சென்று படிப்பை முடித்து அங்கேயே வாழ்க்கையை அமைத்து கொண்டாள்.

இருவருடைய குடும்பங்களும் கலகல என்று சிரித்து அரட்டை அடித்துக்கொண்டு டின்னர் சாப்பிடுகையில் ரகுராம் வாணி இருவரின் மனங்களில் அந்த காலத்து இனிய காதல் தோய்ந்த நாட்கள் ரீங்காரம் செய்து கொண்டு இருந்தது.

பின்னர் வாணியும் அவள் கணவரும் ராணி ரகுராம் குடும்பத்தாரிடம் நன்றி சொல்லி வீடு புறப்பட்டனர். அமெரிக்கா சென்ற பின் இரண்டு மூன்று தடவை வாணியும் ராணியும் பேசி கொண்டனர்.பின் இன்னொரு ஆறு மாத காலம் வாட்சப்பில் அவ்வப்போது மெசேஜ் வைத்துக்கொண்டனர். அதன் பிறகு இருவரிடையே செய்தி பரிமாற்றம் குறைய ஆரம்பித்தது. அதற்கு அடுத்த வருடம் வாணியும் ராணியும் மீண்டும் கபாலீஸ்வரர் கோவிலில் சந்திப்பதற்கு முன் இருந்த, முடங்கி இருந்த நட்பின் தொடர்புக்கு தள்ளப்பட்டனர்.

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (14-Nov-21, 7:26 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 269

மேலே