புரியாத புதிராக

அழகிய அகிலத்தின்
அனுபவங்கள்
அத்தனையும் சரித்திரங்கள்,
எழுதப்படாத வரலாறுகள்
நசுக்கப் படுகின்றனவா/
இல்லை, இல்லை.
கதைகளில் பெறுவோம் கவியங்களாம் ,
நினைவுகளில் நிலைக்கும்
நிஜங்கள் உயிரோவியங்களாம் ,
வாழ்வின் வசந்தங்கள் மனதினிலே
சுகமாக இனிக்கும்,
ஆனால்
சரித்திரங்களோ.... யுத்தங்களும்
சன்னங்களுமாகும்,
அவையே புத்தகங்களாகும்
படிக்க படிக்க தோன்றும்
வீரம் வேகம் சாதுரியம்
இதனால் மாற்றங்கள் உலகில் ..
மனிதன் மாறவில்லை
அவன் பல மாற்றங்களை
அனுபவித்து அல்லலில்
உழலுகின்றான்,
அவையே ஏற்றம் என்பதன்
தோற்றம் .புரியாத புதிராக ....

எழுதியவர் : பாத்திமாமலர் (17-Nov-21, 12:46 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 506

மேலே