அறம்புரிந் தாற்றுவ செய்யாது நாளும் உறங்குதல் காரண மென்னை – அறநெறிச்சாரம் 26

நேரிசை வெண்பா

அறம்புரிந் தாற்றுவ செய்யாது நாளும்
உறங்குதல் காரண மென்னை? - மறந்தொருவன்
நாட்டு விடக்கூர்தி அச்சிறுங் காலத்துக்
கூட்டுந் திறமின்மை யால் 26

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

நான்முகன் படைத்த இறைச்சியாலாகிய வாகனம் (உடல்) அச்சொடிந்து உயிர் பிரிந்து அழியுங் காலத்தில் அதனைப் பொருத்தி நடத்தும் தன்மை இன்றாகவும்,

அறத்தினை விரும்பி இயன்ற அளவு செய்யாமல் மறந்து போதலால்

எப்பொழுதும் காலத்தை வீணே கழித்தல் நெஞ்சே! என்ன காரணம்?

குறிப்பு:

அச்சு - உயிர்; ஊர்தியாகிய உடலின் ஆதரவான பாகம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Nov-21, 11:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே