புளியமரப் பட்டை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

புளிய மரத்தின் புரணிதனைக் கண்டால்
உளைமாந்தை குன்மவலி யோடும் - வளியார்ந்த
பேதிகட் டுஞ்சுரம்போம் பித்தமுறுந் தீபனமாம்
ஓதஅ சீரணமே துன்னு

- பதார்த்த குண சிந்தாமணி

உளைமாந்தை, குன்மவலி, பேதிக்கட்டு, ஆசீரணம் இவை நீங்கும்; பித்தமும் பசியும் விருத்தியாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Nov-21, 8:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே