எண்ணில் நிறைந்த உருவம்

எண்ணில் நிறைந்த உருவம்

அன்பு நிறைந்த குழந்தையின் வடிவம்
மடியில் தவழ்ந்த, தாலாட்டு பாடிய வடிவம்
தன்னுள் மலர்ந்த கலை ஓவியம்
குழந்தை வடிவில் கண்ட ஆனந்தம்
தினம் ஒரு குறும்பு தெய்வீக மனது!
மலர்ந்த முகத்தில் புன்சிரிப்பில்
தன்னை மறந்தேன்! உன்னைக் காணாத பொழுது
விடியலில் விளையும் இன்பம் மழலை
வீடு நிறைந்த காவிய குழந்தை
மடியிலில் தூங்கினாய் இனிமையாய்
எண்ணற்ற அன்பு துள்ளியோடும் மானே !
உன்கழல் விழிகள் என்மதில் பதிந்த அன்றே !
எங்குச் சென்றாலும் என் நினைவு கொண்டாய்
எழுந்து நடந்தாள் புத்தன் போதி மரத்தடியிலும்
தவம் தந்த உலாவந்த மலர்போன்ற மழலை
நிலா போன்றமுகம் ஜொலிக்கின்ற அழகு
எந்த விருந்தாளிக்கும் செம்மலர் வாசலிலே
காத்து நிற்கும் வண்ண பறவை ! நீயே!
மனம் நிறைந்தே நீயே! எங்கள் விருந்தே!
கடிகாரம் போல் ஓயாமல் ஓடும் பெண்ணே !
மனதில் பாயும் முல்லை நறுமணமானவள்
உன் குரல் கேட்ட..அந்த நிமிடங்களில்!
என்னை மறந்து உண்டு -உன் எழிலான
குரலில் தொலைந்த நாட்கள் இன்றும் நினைவுகள்
உன் மென்மையான குரல் இதுவரை கேட்டதில்லை
அன்பான வார்த்தைகள் நினைவில் அழியவில்லை
உன்பெயரில் ஒரு நட்சத்திரம் ஸ்வாதி என்பதே!
மறக்க முடியுமா! நீ உலாவரும் இதய வங்கி
சேமித்தது வைத்திருக்கிறேன் வருவாய் யென
இன்றும் உன்னிடம் சிறைப்பட்டுள்ளேன்!
இன்று வரை விடுதலை கிடையாக்கவில்லை
நான் ஆயுள் கைதியாக இருக்கிறேன்!
விழிகள் உன் உருவம் என்நினைவில்
நகல் எடுத்துக் கொண்டே உள்ளது.
என் இனியவனே உன்னிடம் என்றும்
வாழ்கிறேன் ஏங்குகிறேன் உருவத்தால்!
எங்குச் சென்றாய் நீ மண்ணில் காணலில்லை
காத்திருக்கிறேன் வருவாய் யென! விழித்திருக்கிறேன்!

எழுதியவர் : இராகு.அரங்க.இரவிச்சந்திர (24-Nov-21, 3:38 pm)
பார்வை : 458

மேலே