எற்றே நிலைமையில் நன்னெஞ்சே நின்னொடு வாழ்க்கை – அறநெறிச்சாரம் 33

நேரிசை வெண்பா

அற்ற பொழுதே அறநினைத்(தி) யாதொன்றும்
பெற்ற பொழுதே பிறநினைத்தி - எற்றே
நிலைமையில் நன்னெஞ்சே! நின்னொடு வாழ்க்கை
புலைமயங்கி யன்ன துடைத்து. 33

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

ஒரு நிலையில்லாத நல்ல மனமே! பொருளற்ற காலத்தில் பொருளிருப்பின் அறம் செய்யலாம், இப்பொழுது இல்லையே என்ன செய்வது என்று நினைத்து வருந்துகின்றாய்;

ஏதாவது ஒரு வழியில் செல்வத்தினை அடைந்த காலத்திலோ அறத்தினை மறந்து பிற பாவச்செயல்களைச் செய்ய விரும்புகின்றாய்; இது எப்படி?

உன்னோடு கூடிவாழும் இவ்வாழ்வானது தீயகுணமுடையவர்களோடு சேர்ந்து வாழ்வது போலாகும்.

குறிப்பு:

புலை - தீயகுணமுடையவர்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Nov-21, 10:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

சிறந்த கட்டுரைகள்

மேலே