இயற்கை எனும் கொடை

கொட்டும் அருவிகளும்
கனி கொத்தும் குருவிகளும்
சில்லென்ற காற்றும்
சிலிர்க்க வைக்கும் நறு மணமும்
மலை முட்டும் மேகங்களும்
பனி படர்ந்த புல்வெளியும்
ஆர்ப்பரிக்கும் அலைகடலும்
வளம் தரும் கடல் வாழினமும்
சேற்றில் முளைக்கும் செங்கதிரும்
ஆற்றில் கூடும் நாணல் கூட்டமும்
வானுயர்ந்த மரங்களும்
ரீங்காரம் இடும் வண்டுகளும்
குளிர் தரும் வெண்ணிலவும்
இதழ் விரிக்கும் நறுவீகளும்
தேனெடுக்கும் வண்டுகளும்
பச்சை பசேல் புல்வெளியும்
பறந்து திரியும் பறவைகளும்
இயற்கை கொடுத்த நன்கொடையாம்
நம் அறியாமையால் இவை அழியாமல் பாதுகாப்போம்
நம் அறிவாலே இயற்கை வளம் பெருக்குவோம்.....

எழுதியவர் : நா.சந்தன கிருஷ்ணா (26-Nov-21, 7:56 pm)
சேர்த்தது : நா சந்தன கிருஷ்ணா
பார்வை : 262

மேலே