பரவசம்

அண்டை அயலவர் அன்புடன் ஒன்றாய் அகமகிழ்ந்து
சண்டை யுடனொரு சச்சர வின்றி சமரசமாய்
கண்ட தினியநற் கண்ணிய வாழ்க்கை கலைநயமாம்
பண்டை வழக்கதைப் பற்றிடத் தோன்றும் பரவசமே

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (27-Nov-21, 2:16 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : paravasam
பார்வை : 84

மேலே