இரவின்🌚நினைவில்💕வாழ்கிறேன்

காதல் நினைவுகள்
களையாமல் தோன்றிட
சாய்ந்தாட நினைத்தேன்
சாயங்கால வேலையில்......!!

உன்னில் நிறைந்தேன்
உறையாமல் இருந்திட
உறக்கங்கள் மறந்தேன்
உன்னை நினைக்கையில்.....!!

காதலை அள்ளிக் கொடுத்தேன்
என்னுடன் இருந்திட
கட்டி அணைத்தேன்
காணுகின்ற பொழுதினில்........!!


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (27-Nov-21, 9:35 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 256

மேலே