ஆணும், பெண்ணும்

ஆண், பெண் இருவருக்கும் இடையில்
உறவுகளும் பிணக்குகளும் வாழ்வில்
தொடர்ந்து வருபவைதான்......

ஆண், பெண், இருவரின் உறவும்
ஆண்டவன் படைத்த இயற்கை
விதிகள், இருவரின் அனைத்து
செயல்பாடுகளும் சமமே ஆனால்
அதில் வேறுபாட்டை தூண்டியது
யார்? உருவாக்கியது இன்று, நேற்று,
ஆதியிலே?!

அனைத்து மனித உயிர்களை சுமப்பது
பெண்கள் தான் அதுவும் பத்து மாதம்தான்
பிறகு எப்படி ஆண்கள் பெண்களை விட
உயர்வு என்று எண்ணுகிறாய் ?!

உனக்கு ஆறு அறிவும்
எனக்கு ஆறு அறிவும்
ஒன்றுதானே உனக்கு உடைய
அனைத்து பசியும் எனக்கும் உண்டு
அப்படி இருக்கும்போது
நீ என்னைவிட உயர்வு என்று
எப்படி எண்ணினாய் ?!

உனக்கான கஷ்டங்களும்
மனவேதனைகளும் போராட்டங்களும்
எனக்கும் உண்டு அப்படி அனைத்தும்
சமமாக இருக்கும் பொழுது எப்படி
நீ என்னை தாழ்மையானவள்
என்று நினைத்தாய்?!

கூலிவேலை முதல் கணினி
வேலை வரை பகிர்ந்துகொள்ள
என்னை தேடுகின்றாய்
ஏன் சமையல் மற்றும் எங்கள்
வேலைகளை பகிர்ந்து கொள்ளாமல் ஒதுங்குகின்றாய் ?!

பெற்றோர்களுக்கு நீயும் நானும்
ஒரே மாதிரியான பிறப்புதான்
வளர்ப்பும் ஒரே மாதிரிதான்
அப்படி இருக்கும் பொழுது
பெற்றோர் சொத்து மட்டும்
உனக்கு சொந்தம் என்பது
எந்த விதத்தில் நியாயம்
சிந்தித்துப்பார் ஆண் இனமே?

சுக துக்கம் இன்ப துன்பம்
இருவருக்கும் பொதுவானது
அப்படி இருக்கும்போது
எப்படி துக்கமும் கஷ்டமும்
துயரமும் எனக்கு மட்டும்
தனியுடமை ஆனது?!

கடவுளின் படைப்பை நான் ஏற்கிறேன்
அதனால்தான் சுமப்பதில் உன்னை
கட்டாயப்படுத்தவில்லை ஆனால்
வளர்ப்பதில் உன்னை என்னோடு
பகிர்ந்து கொள்ள எதிர்பார்க்கின்றேன்.

மற்ற உயிரினங்களை விட உன்னை
நான் உயர்வாக நினைக்கின்றேன்..!
ஆனால் அவைகளின் குணம் செயல்கள்
துளிகூட உன்னிடம் எப்படி இல்லாமல்
போனது !?

பிற உயிரினங்கள் எதுவும் தன் துணையை
தாழ்த்துவதில்லை ஒரு போதும்
ஆண் இனமே சிந்தித்து பாருங்கள் உங்கள் நிலை என்ன என்று....
எதிர்காலத்தில் உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளுங்கள்

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (27-Nov-21, 5:11 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 85

மேலே