பன்றி - உடும்பு - காக்கை - இவைகளின் நெய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பன்றிநெய் நீர்க்கடுப்பு பாயுமூ லத்திரத்தங்
கன்றிய வாதக் கடுப்புமுதற் - துன்றியநோய்
போக்கு முடும்பின்னெய் போமிரத்தம் போக்கிவிடுங்
காக்கைநெய்கா மாலைக்காங் காண்

- பதார்த்த குண சிந்தாமணி

பன்றி நெய் மூத்திரக் கடுப்பையும், இரத்த மூலக் கிராணியையும் நீக்கும்; உடும்பு நெய் இரத்த கிராணியை நீக்கும்; காக்கை நெய் காமாலையைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Nov-21, 6:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 6

மேலே