காலம்

காலம்
நமது கைகளில்
கைபேசியை கொடுத்து
காரியங்களை
விழுங்குகிறது!

கைபேசி
நம்மை
கட்டிப்போட்டு
காட்சி தீனி போடும்
தொட்டி!

காலுக்கு
முடக்கு!
கைக்கும் கண்ணுக்கும்
துடுக்கு!

காலம்
குழந்தைகள்
சோறுண்ண
கைபேசியை
கைகளில்
தினித்து செல்கிறது

தாய்
வாயில் சோற்றை
தினித்து
செல்கிறாள்!

காலம்
ஓய்வொடுத்துக்கொள்வதில்லை
பலரை
ஓய்வுக்கூடத்திற்கு
அனுப்புகிறது!

காலம்
வெம்மை தண்மை
என விதவிதமாய்
உடையணிந்து
நம்மை அணுகுகிறது!

காலம்
சமநிலைவாதி
ஏழை பணக்காரன்
எல்லோருக்கும்
இருபத்தி நான்கு மணி
இலவசமாக வழங்கப்படுகிறது!

முனைப்புடன்
இருப்பவர்க்கு
அது மூலதனம்
சளிப்புடன் இருப்பவர்களுக்கு
அது சங்கடம்!

காலம்
இரண்டு ஏட்டு
புத்தகம்!

பகல் பக்கம்
பலர் உழைக்கும்
பக்கம்!

பலர் கொள்கை
விற்று
பகல் கொள்ளை
அடிக்கும் பக்கம்!

இருள் பக்கம்
ஓய்வும்
எல்லா இனவிருத்திகளும்
இருளிலேயே துவங்குகிறது!

காலம்
ஒரு சக்கரம்
மேலே இருப்பவரை
கிழாகவும்

கிழே இருப்பவரை
மேலேயும்
ஏற்றிவிடும!

காலத்திற்கு
கால்கள் கிடையாது
ஆனால் நாலுகால் பாய்ச்சலில்
ஓடும்!

காலம்
சிலர் மீது
இருட்டை மட்டுமே
இட்டுச்சொல்லும்!

காலம்
சிலருக்கு
இனிப்பை மட்டுமே
தினித்து செல்லும்!

சிலர்
கண்ணீரால்
காலத்தைக்
குளிப்பாட்டுகிறார்!

சிலர்
காலத்தைக்
காதலால்
குளிப்பாட்டி குதுகளிக்கிறார்கள்!

காலம்
தன்னை
நல்ல காலம்
எமகண்டம் என
அடையாள படுத்திகொள்ளவதில்லை

மனிதனே
தன் பிரிவினைகளை
என்மீதும்
தினிக்கிறான்!

நான் பொதுவானவன்
கார்மேகம்
என்னோடு ஓடிவந்து
கார்காலம் என
பெயர் கொடுக்கிறது!

சேர்கையினால்
பெயர் கெடுகிறது
அல்லது
பெயர் வருகிறது!

காலம்
சில புண்களை
ஆற்றுகிறது!

காலம்
சில காயங்களை
உருவாக்கி
மாறா வடுக்களை
உருவாக்குகிறது!

எழுதியவர் : புஷ்பா குமார் (27-Nov-21, 10:41 pm)
சேர்த்தது : மு குமார்
Tanglish : kaalam
பார்வை : 129

மேலே