தொற்று

ஒட்டுறவு அற்றதென உற்றவரை வெட்டுகிறக்
கெட்டமன துற்றவரை யெட்டியிரு – கிட்டவர
விட்டவரை யொட்டுவதை விட்டுவிடு குற்றமிலை
துட்டரவ ரொட்டுகிறத் தொற்று

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (28-Nov-21, 1:58 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 69

மேலே