மனிதனும் அனுபவமும்

அனுபவங்களே ஒரு மனிதனை
பண்புகளும் மாண்புகளும்
நிறைந்த மனிதனாக
மாற்றம் பெற செய்கிறது ...!!

மாற்றம் அடைந்த மனிதன்
தனது அனுபவங்களை
தேவைப்படும் இடங்களில்
மற்றவர்களுடன் பகிர்ந்து
கொள்ளும்போது தான்

அந்த அனுபவ பகிர்வுகள்
சில நேரங்களில்
சிலரால் தவறாக
அர்த்தம் கொள்ளப்பட்டு
வீணான விவாதங்களுக்கு
வித்தாக அமைந்து
சஞ்சலத்தை
கொடுத்து விடுகிறது ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (28-Nov-21, 9:16 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 181

மேலே