அறநூலால் அறியவேண்டிய ஆறு பொருள்கள் – அறநெறிச்சாரம் 38

நேரிசை வெண்பா

தலைமகனும் நூலும் முனியும் பொருளும்
தொலைவின் றுணிவொடு பக்கம் - மலைவின்றி
நாட்டியிவ் வாறும் உரைப்பரே நன்னெறியைக்
காட்டி யறமுரைப் பார் 38

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

ஒழுக்க நெறியினை விளக்கி அறநூலை உணர்த்துவோர் அருகனும் மெய்ந்நூலும், துறவியும், உண்மைப் பொருளும் அழிவின் துணிவையும், அருகனிடத்தன்பும் இவ்வாறு பொருள்களையும் மாறுபாடு அற்றனவாக நிலைநிறுத்திச் சொல்லுவார்.

குறிப்பு:

தொலைவின் துணிவு - அழிவின் நிச்சயம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Nov-21, 12:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே