காதல் குறள் பத்து

ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய
ஒரு விகற்பக் குறள் வெண்பாக்கள்

ஒன்று
காதலொருப் பூங்காற்று யள்ளித் தெளிக்கா
காதலை நன்றாய் வளர்


இரண்டு

உன்காத லையேலம் ஊருக்கேன் கூவுகிறாய்
உன்காதல் கேட்குமா ஊரு

மூன்று

ஒப்பாரி யாக்காதல் உருகப் பிறருமே
தப்பா துனக்கின் பமது


நான்கு

உன்காதல் இன்பம் உனக்கு பிரண்டவும்
அண்டிடாதே வாழவிடு வாழு

ஒரு விகற்பக் குறள் வெண்பாக்கள்

ஐந்து

கிறுக்கல் கவிதையென்றாய் கேட்டோம் உளறல்
கிறுக்கை தினிக்காதே நீ

ஆறு

உன்காதல் கேட்பது ஊருக்கு வேலையா
உன்கற்ப னைக்கட்டை யோடு

யேழு

மொட்டையோ நெட்டையோ குட்டையோ யாப்பினில்
ஒட்டப் புனைந்துநீ பாடு

எட்டு

காதலென்றால் தேன்கூடு கட்டுவோ மென்பரது
வேதனைப். பெரும்பாடாம் கேள்

ஒன்பது

நல்ல புதுக்கவிதை நாற்பதாண்டு முன்பார்த்தேன்
இல்லாக் கிறுக்கலாம் இன்று

பத்து

காதல் வெளிசொல்லாக் காதலைச் செய்யாயின்

காதல் கிறுக்கல் தவிரு


...?

எழுதியவர் : பழனி ராஜன் (28-Nov-21, 5:35 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 35

மேலே