பறை

தளம் போட்டு தீர்க்கும்
விளையாட்டு பறை..!!

தழுவி கொண்டு ஆசை தீரா
அடிக்கும் பறை..!!

பட்டி தொட்டி எங்கும்
எதிர் ஒலிக்கும் பறை..!!

ஆடாதவரையும் ஆட
வைக்கும் பறை..!!

பூமி அதிரும் பறை ஓசைக்கு
என் பாட்டான் கொடுத்த பறை..!!

பறை பறை எவன் வாழ்வு
மடிந்தாலும் கேக்கும் இசை பறை..!!

பறையை கொண்டு பரமசிவனையும்
அடிமை படுத்தும் எங்கள் பறையடா..!!

எழுதியவர் : (29-Nov-21, 5:51 am)
சேர்த்தது : கவி குரு
Tanglish : parai
பார்வை : 18

மேலே