கனிந்த பழமாய்ச் சுவையாதலுங் கல்வி யொன்றே - காப்பியக் கலித்துறை

காப்பியக் கலித்துறை

முதல் மூன்று சீர்களுக்கிடையில் வெண்டளை பயின்று வர வேண்டும்.
மூன்றாம் சீர் கனிச்சீர்; நான்கு, ஐந்தாம் சீர் மாச்சீர் ஆகும்

மாச்சீர், புளிமாச்சீர், புளிமாங்கனி, தேமா, தேமா - என்றமையும் ஐஞ்சீரடி நான்காகி வருவது.
காப்பியக் கலித்துறை

இனித்த கவியைச் சிறப்பாக்கிடும் இன்சீர்ப் பாங்காய்த்
தனித்த குணமாம் கனிச்சாறெனத் தன்மை தந்து
கனிந்த பழமாய்ச் சுவையாதலுங் கல்வி யொன்றே
பனித்த மனத்தில் இனிதாமெனப் பார்த்தேன் நானே!

– வ.க.கன்னியப்பன்

எ-டு:

அன்னா ரமருங் களஞ்சென்றயி லேந்து நம்பி
நன்னா யகமாந் திருநாமந வின்று போற்றிப்
பொன்னா டிறைகூர் திருநீங்கிய புங்க வன்றன்
முன்னா லணுகி இருந்தானடல் மொய்ம்பின் மேலான்

- (கந்தபுராணம். வீரவாகு சயந்தனைத் தேற்று படலம். 8)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Nov-21, 11:34 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே