மன அழுத்தத்தை

ஆயிரம் கண்டு பிடிப்பை விட
ஒரு சிரிப்பு உயர்வானது
சிரியுங்கள் அது இதயத்தின்
இசை என்கிறார் அரிஸ்டாட்டில்
அள்ள அள்ளக் குறையாததும்
அந்த சிரிப்பு மட்டுமே !

குழந்தை பருவ சிரிப்புக்கு
உலகில் அதற்கு ஈடாக
வேறெதுவும் மகிழ்வைத்
தருவதில்லை
சிரிக்கும் மனிதன் கூட
சிங்கத்திற்கும் நண்பனாவான்

உலகின் பொது மொழியென்று
உயர்வாக பேசப்படும் சிரிப்புக்கு
மொழி பெயர்ப்பாளர்
எவரும் தேவையில்லை
மனித இனத்திற்குக் கிடைத்த
மகத்தான நன்கொடை இது

ஒரு நிமிடச் சிரிப்பு
உடலின் தசைகளுக்கு
புத்துணர்ச்சி தரவல்லது
உள்ளுறுப்புகளும்
வலிமை பெறுவதோடு
மன அழுத்தத்தையும் குறைக்கும்

எழுதியவர் : கோ. கணபதி. (30-Nov-21, 4:34 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 67

மேலே