அவள் பெயர்.....

அவள்
வருகின்ற நேரம்
நெருங்கிவிட்டது.....
மாலைப்பொழுது
வந்து விட்டதால்
அவள் வருகின்ற நேரம் நெருங்கிவிட்டது......

பூஞ்சோலையின் நடுவே
புகுந்து வருவதால்
மலர்களின்
மனத்தையெல்லாம்
தன் மேல்
பூசிக் கொண்டு வருவாள்....

வயல்வரப்பின் மீது அசைந்தாடி வரும் போது
அதற்கேற்ப பயிர்களும்
அசைந்து ஆடுவது
கண்கொள்ளா
காட்சியாக இருக்கும் ......

உதிர்ந்த
சருகுகள் மீது
அவள் வரும்போது
ஒரு சங்கீதக் கச்சேரியே
நடத்தி விட்டு வருவாள்.....

அருகில் வந்து தீண்டும்போது கோடான கோடி சுகங்களை
ஒரு நொடியில்
அல்லவா கொட்டி விடுகிறாள்.....

கட்டி பிடித்து
இறுக்கி அணைத்து
முத்தமிட
அளவில்லாத ஆசை தான்
ஆனால் ....கைக்கு
சிக்கியதே இல்லை....

வருகின்ற வேகத்திலேயே
சீண்டி விட்டு
செல்வது போல்
சென்று விட்டு
திரும்பவும் திரும்பி வருவாள்......

அவள் செய்யும் குறும்புகள் எண்ணிலடங்காதது

எவ்வளவு
களைப்பாக இருந்தாலும்
உடல் சோர்வாக இருந்தாலும் உள்ளம் சோர்வாக இருந்தாலும் அவள் தீண்டிய
ஒரு நொடியில்
எல்லாம் பறந்து
போய்விடும்

நான் வெளியில்
இருக்க தவறு நாட்களில்
கதவையும்
ஜன்னலையும் தட்டி
தன் வருகையை தெரிவிப்பாள்...

அட......!
மரம் செடி கொடிகள் அசைகின்றதே! அப்படி என்றால்
அவள் வந்துவிட்டாள்...

அவள் பெயர்தான்
"தென்றல் காற்று......!"


கவிதை ரசிகன்

எழுதியவர் : (2-Dec-21, 10:14 pm)
Tanglish : aval peyar
பார்வை : 34

மேலே