அசையும் அத்திவாரம்

அசையும் அத்திவாரம் (ஒயிற்கும்மி)
=====================================
போய்விடும் நோயென புன்முறு வல்செய்ய
போராடும் மக்களைப் பந்தாடவே
புயலாயொரு புதுநோயது புவிமீதினி லுருவானது
பொல்லாதப் பீதியைத் தந்தாடுதே!
*
வாய்விட்டு சொல்லிட வார்த்தையு மின்றியே
வாழ்வாதா ரமிங்கு வாட்டிடுதே
வருவாயதன் மடிமீதினி லிடியேவிழும் நிலையாமிதன்
வன்முறை வாழ்நாளை ஆட்டிடுதே
*
எமிக்ரோன் என்றிது இன்னொரு பெயரால்
எங்குமே பரவத் தொடங்கிட்டே
எதிர்த்தேவிட இடுமூசியைத் தடுத்தேயுயிர் குடித்தேவிட
எத்தனிக் குமிது வடங்காதே
*
அமிழ்ந்தி டும்வரை அன்றாட வாழ்க்கையில்
அல்லலும் கொண்டிட லானதுவே
அலைமீதினில் படகாகிய மனமானது தடுமாறிட
அத்திவா மசைந்து போனதுவே!
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (3-Dec-21, 2:21 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 50

மேலே